பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்..
இந்த நிலையில் அன்புமணிக்கு மாற்றாக பாமகவில் ஸ்ரீகாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.. மேலும் அன்புமணிக்கு செக் வைக்க ராமதாஸ் மகளுக்கு மகுடம் சூட்ட உள்ளதாகவும் தகவல் வெளியானது..
இந்த நிலையில் ராமதாஸ் தனது 2வது மனைவி உடன் சுசீலாவுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி பாமகவில் பரபரப்பை கிளப்பி உள்ளது… ராமதாஸ் உடன் பல ஆண்டுகளாகவே இணைத்து பேசப்பட்டவர் தான் சுசீலா. இவர் செவிலியர் என்று கூறப்படுகிறது.. இவர் பல ஆண்டுகளாக ராமதாஸை கவனித்துக் கொள்ளும் நர்சாக இருந்தார்.. அதாவது அன்புமணி குழந்தையாக இருக்கும் போதே இவர் ராமதாஸ் வீட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தாராம்.. ஒரு கட்டத்தில் சுசீலாவை ராமதாஸ் 2வது திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.. 2006 வாக்கில் இதுதொடர்பாக பல செய்திகளில் பெயர் குறிப்பிடப்படாமல் செய்திகள் வெளியானதாகவும் கூறப்படுகிறது..
ஆனால் சுசீலா உடனான உறவை ராமதாஸ் இதுவரை வெளிப்படையாக காட்டிக் கொண்டது இல்லை.. இதனால் சுசீலா விவகாரமும் ரகசியமாகவே வைக்கப்பட்டது.. இந்த சூழலில் கடந்த 24-ம் தேதி, திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஸ்டார் ஹோட்டலில் ராமதாஸ் – சுசீலா தம்பதியின் திருமண விழா நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியின் போட்டோக்கள் இணையத்தில் வெளியானது.. சுசீலாவின் குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.. இந்த சம்பவம் தற்போது தைலாபுரத்தில் பூதாகரமாக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது..
ஏற்கனவே அன்புமணி பிரச்சனையால் பாமகவில் உச்சக்கட்ட மோதல் நிலவி வரும் நிலையில், தற்போது சுசீலா விவகாரமும் புதிய புயலை கிளப்பி உள்ளது.. பாமகவில் வெடித்துள்ள அப்பா -மகன் மோதலுக்கு காரணமே இந்த சுசீலா தான் என்றும் கூறப்படுகிறது..
ஆனால் இந்த போட்டோவை வெளியிட்டதே அன்புமணி தரப்பு தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. ராமதாஸின் பெயரை கெடுப்பதற்காகவே சுசீலா உடனான திருமண நாள் போட்டோக்கள் வேண்டுமென்ற கசியவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த நிலையில் ராமதாஸின் 2வது மனைவியின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ராமதாஸுக்கும் 2 மனைவியா என்பதை நம்ப முடியாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர்..