மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ் உடல்நிலை குறித்து அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்..
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ராமதாஸ் உடல்நிலை குறித்து அன்புமணி செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது பேசிய அவர் “ நேற்று மாலை மருத்துவர் ஐயா அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. இன்று காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது..
பயப்படுவதற்கு எதுவும் இல்லை.. ஐயா அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று இருதய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. மேலும் 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.. தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. ஐயா தற்போது ஐசியூவில் இருக்கிறார்.. 6 மணி நேரம் அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்படும்.. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. அவர் ஐசியூவில் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை.. நான் மருத்துவர்களிடம் பேசி உள்ளேன்..” என்று தெரிவித்தார்..