பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல், சில மாதங்களாகவே நீடித்து வருகிறது. இது வெறும் குடும்பப் பிளவாக தொடங்கினாலும், தற்போது தந்தை மீதே கொலை மிரட்டல் சதி நடப்பதாக கூறப்படும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ. அருள் கூறுகையில், ராமதாஸை கொலை செய்யும் நிலைக்கு அன்புமணி ஆதரவாளர்கள் வந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பாமகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்புக் கருவி வைக்கப்பட்ட விவகாரம் குறித்தும் அவர் மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒட்டுக்கேட்புக் கருவி தொடர்பான புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ராமதாஸ் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளை அன்புமணி ஆதரவாளர்கள் கையில் வைத்துள்ளனர் எனவும் அருள் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Read More : ஒரு வாரத்திற்கு இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்..!! உடல் எடை சட்டென குறைந்துவிடும்..!! டயட் லிஸ்ட் இதோ..!!



