பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.
மேலும் பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் என்று ராமதாஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமான அரசியல் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பாமக நிறுவனர் ராமதாஸை கட்சியின் தலைவராக தேர்வு செய்து, அதற்கான தீர்மானம் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கும், வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கும் முழு அதிகாரம் ராமதாஸுக்கே வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில், பாமக தலைவர் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய முடிவுக்கும் செயற்குழு ஒப்புதல் வழங்கியது.
இதன் மூலம், பாமகவில் நிலவி வந்த இருதரப்பு செயல்பாடுகள் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவுக்கும் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Read more: தேநீர் பிரியர்களுக்கு எச்சரிக்கை..! இதை அருந்துவது பாம்பு விஷத்தை குடிப்பதற்கு சமம்!



