ராமாயணா திரைப்படத்தின் இரு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.4000 கோடிக்கும் மேல் செலவாகும் என்று நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
சரித்திர கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம்தான் ராமாயணா. இப்படத்தை இயக்குநர் நிதேஷ் டிவாரி இயக்கி வருகிறார். ராமர் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க, சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் ராவணனாக கேஜிஎப் யாஷ் நடிக்கிறார். உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் Hans Zimmer ஆகிய இருவரும் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
இப்படத்தை நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இரு பாகங்களுக்கும் ரூ.1600 கோடி பட்ஜெட் என முன்பு தகவல் வெளியான நிலையில், தற்போது இரு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.4000 கோடிக்கும் மேல் செலவாகும் என்று நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இது ”கல்கி 2898 ஏடி”, ” ஆர்.ஆர்.ஆரை” விட 8 மடங்கு அதிகம் ஆகும்.
எந்தவொரு இந்தியப் படத்தின் பட்ஜெட்டும் ‘ராமாயணம்’ படத்தின் பட்ஜெட்டுக்கு அருகில் கூட இல்லை என்றும், இது ஒரு மகா காவியம் என்பதால், ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். இப்படத்தில் நடிக்க ரன்பீர் கபூர் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.150 கோடியும், யாஷ் ரூ.100 கோடியும், சாய் பல்லவி ரூ.12 கோடியும் சம்பளமாக வாங்கி இருக்கிறார்களாம். படத்தின் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Read more: 2026-ல் தமிழ்நாட்டில் யார் ஆட்சி..? ‘Vote Vibe’ நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் சொன்ன பெயர்..