பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா..?

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 61-வது படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இயக்குனர் ரஞ்சித் மற்றும் விக்ரம் ஆகியோர் தங்களின் மற்ற படங்களின் பணிகளை முடித்துள்ள நிலையில், விக்ரம் நடிக்கும் 61-வது படத்தை விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ படங்களை அடுத்து, விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா..?

இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பா.ரஞ்சித்துடன் முதன் முறையாக இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைகிறார். சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி .. வரும் அக்டோபர் முதல் தொடங்குகின்றது….

Sun Sep 18 , 2022
தமிழக்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து வாரந்தோறும் பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது. பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அக்டோபர் மாதத்தில் இருந்து வாரம் தோறும்  புதன் கிழமைகளில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , ’’ அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவே மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் […]
மா.சுப்பிரமணியம்

You May Like