இன்றைய எபிசோட்டில் சத்யா தனது பைனான்ஸ் நிறுவன வேலையில் திருப்தியில்லாமல், ராஜினாமா செய்யத் தீர்மானிக்கிறார். “இந்த வேலையில் நியாயம் குறைவு, எனக்கு மனநிறைவு இல்லை” என்று கூறி, ரிசைன் செய்யப் போகும் நேரத்திலே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
அவருடைய மேலாளருடன் ஒரு இளம் பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்து சத்யா குழப்பமடைகிறார். அதற்கிடையில் அந்தப் பெண், “நான் ரேகா. ஃபாரினில் படிப்பு முடிச்சு இப்போதான் வந்திருக்கேன். இனி அப்பாவோட பிசினஸை நான்தான் பார்த்துக்கப் போறேன். நீங்க சொன்னபடி இந்த கம்பெனியை நம்பிக்கைக்குரியதாக மாற்ற நானும் உங்க கூட சேரப் போறேன்” என்று கூறுகிறார்.
அவளுடைய பேச்சால் மனம் நெகிழ்ந்த சத்யா, ராஜினாமா செய்வது குறித்து எடுத்த முடிவை மாற்றி விடுகிறார். அந்த ரேகா வேறு யாருமில்லை, மீனாவின் தொழில் எதிரியான சிந்தாமணியின் மகள்.ரேகா மற்றும் சத்யா இடையே காதல் மலருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
மறுபுறம் ரவியும், நீத்துவும் ஹோட்டல் பிசினஸைப் பற்றி பேசிக் கொண்டிருக் கிறார்கள். அதற்கிடையில் ஸ்ருதி வந்து, “என் ரெஸ்டாரன்ட்டுக்கு ஆள் பற்றாக்குறை இருக்கு. உங்க ஹோட்டல் உணவுகளை வாங்கி டெலிவரி பண்ணலாமா?” என்று கேட்கிறார். இதைக் கேட்ட ரவி சந்தேகத்துடன், “இதெல்லாம் சரியாக வருமா?” என்கிறார். ஆனால் நீத்து, “இது நல்ல ஐடியாதான்” என உடனே ஒப்புக்கொள்கிறார்.
அப்போதே ஸ்ருதி, “நீங்க என் ரெஸ்டாரன்ட் ஆட்களை உங்கள் பக்கம் இழுத்ததால, எனக்குப் பார்ட் டைம் வேலை பார்க்க கல்லூரி மாணவர்கள் நிறைய கிடைச்சிட்டாங்க” என்கிறார். இதைக் கேட்ட ரவி அதிர்ச்சி அடைகிறார். “அந்த மூன்று பேரும் தாமாக வந்தாங்கன்னு சொன்னீங்களே, நீங்க தான் வரவழைச்சீங்களா?” என்று கேட்க, நீத்து “பிசினஸ்ல இதெல்லாம் சகஜம் தானே!” எனச் சொல்ல, ரவி கடுப்பாகி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.
Read more: ராஜ யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண மழை! வாழ்க்கையில் திடீர் மாற்றம் வரும்!



