Breaking : ஒரே நாளில் 2 முறை சரிவு.. தங்கம் விலை ரூ.3,680 குறைந்ததால் குஷியில் நகைப்பிரியர்கள்!

Firefly indian family purchasing gold ornaments in jewellry with 16 9 ratio with night glit 766387 1

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. ஓரிரு நாட்கள் மட்டுமே விலை குறைந்தது.. நேற்று காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்ந்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்த தங்கம் விலை மாலையிலும் குறைந்துள்ளது.. அதன்படி இன்று மாலை நிலவரப்படி சென்னையில் தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ. 160 குறைந்து, ரூ.11,540க்கு விற்பனையாகிறது.. அதே போல் இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.92,320-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3,680 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்த நிலையில் மாலையில் ரூ. 5 குறைந்துள்ளது.. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ1,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : புயல் உருவாகாது.. காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கரையை கடக்கும்.. வானிலை மையம் தகவல்!

RUPA

Next Post

Vastu: நேர்காணலுக்கு செல்லும்போது இதை செய்யுங்கள்.. வெற்றி உங்களை தேடி வரும்..!

Wed Oct 22 , 2025
Vastu: Do this when going for an interview.. Success will come your way..!
interviews 450 out

You May Like