அமைச்சர்களிடம் குவியும் சிபாரிசுகள்..!! சட்டமன்ற தேர்தலில் மேயர் பிரியா போட்டி..!! எந்த தொகுதியில் தெரியுமா..?

Priya 2026

தமிழக அரசியலில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள சூழலில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் முக்கிய கவுன்சிலர்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. 2022-ல் சென்னையின் முதல் தலித் பெண் மேயராக பொறுப்பேற்ற பிரியா ராஜனின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அவர் சட்டமன்ற தேர்தலை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.


சென்னை மாநகராட்சியில் தற்போது பொறுப்பில் உள்ள 10-க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, 2021 தேர்தலின் போது வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் தோல்வியை தழுவியவர்கள் இம்முறை எப்படியாவது எம்.எல்.ஏ சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதற்காக அமைச்சர்களான மா. சுப்பிரமணியன் மற்றும் பி.கே. சேகர்பாபு ஆகியோரின் ஆதரவை திரட்டும் முயற்சிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

திரு.வி.க. நகரில் மேயர் பிரியா..?

இந்த ரேஸில் மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். மேயர் பிரியா, தற்போது தனித்தொகுதியாக உள்ள திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ தாயகம் கவி அங்கேயே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள போதிலும், இம்முறை உள்ளூர்காரர் மற்றும் பெண் வேட்பாளர் என்ற அடிப்படையில் மேயர் பிரியாவுக்கு திமுக தலைமை பச்சைக்கொடி காட்டியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், துணை மேயர் மகேஷ்குமார் வேளச்சேரி தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இவர்களை தவிர, சென்னை மாநகராட்சியை சேர்ந்த மேலும் 5 முக்கிய திமுக கவுன்சிலர்களுக்குச் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

Read More : கொளுத்தும் கோடை வெயில்..!! ஏசி வாங்கப் போறீங்களா..? மின் கட்டணத்தை குறைக்க இது தான் பெஸ்ட் ஏசி..!!

CHELLA

Next Post

FLASH | பெற்றோர்களே..!! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்..!! சுகாதாரத்துறை வெளியிட்ட பரபரப்பு உத்தரவு..!!

Mon Mar 2 , 2026
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கும் முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆங்காங்கே ‘சின்னம்மை’ (Chickenpox) பாதிப்புகள் தலைதூக்க தொடங்கியுள்ளன. பரவி வரும் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, தமிழக பொது சுகாதாரத்துறை அதிரடியான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்தத் தொற்று எளிதில் பரவக்கூடும் என்பதால், பெற்றோர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை, […]
school student

You May Like