மத்திய அரசின் இந்திய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் உள்ள உதவி மேனேஜர் மற்றும் நிர்வாகி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
உதவி மேனேஜர் பணியிட விவரம்:
- மேனேஜ்மெண்ட் – 20
- நிதி – 8
- HR – 4
- சட்டம் – 2
- பொறியியல் – 15
- தீயணைப்பு பாதுகாப்பு – 2
- கடல்சார் கட்டடக்கலை – 2
- நிறுவன செயலாளர் – 2
நிர்வாகிகளுக்கான காலிப்பணியிடங்கள்
- நிதி – 10
- HR – 6
- மக்கள் தொடர்பியல் – 2
- இந்தி – 2
வயது வரம்பு: அதிகபடியாக வயது வரம்பு 27ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கான வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது.
கல்வித்தகுதி:
மேனேஜ்மெண்ட் / HR: முழு நேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது பதவி சார்ந்த பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ.
நிதி: CA / CMA முடித்தவர்கள்.
சட்டம்: 3 அல்லது 5 வருட சட்டப்படிப்பு முடித்தவர்கள்.
பொறியியல்: சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், தகவல் தொழில்நுட்பம் (BE/B.Tech).
தீயணைப்பு பாதுகாப்பு / கடல்சார் கட்டடக்கலை: சம்பந்தப்பட்ட பொறியியல் படிப்பு முடித்தவர்கள்.
நிறுவன செயலாளர்: CS தகுதி பெற்றவர்கள்.
நிர்வாகிகள் (நிதி / தொடர்புடைய பிரிவு): BBA/BMS, நிதி சார்ந்த படிப்புகள், எம்பிஏ, மாஸ் கம்யூனிகேஷன், இந்தி படிப்புகள் முடித்தவர்கள். அனுபவம்: குறைந்தது 1 ஆண்டு, கணினி திறன் அவசியம்.
சம்பள விவரம்: உதவி மேனேஜர் பணியிடங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையும், நிர்வாகிகள் பதவிக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
எழுத்துத் தேர்வு:
- மதிப்பெண்கள்: 120
- கேள்விகள்: 100
- தலைப்புகள்: நுண்ணறிவு, லாஜிக்கல் ரீசனிங், கணினி திறன், ஆங்கிலம், உளவியல் சோதனை
- தேர்ச்சி அடைவர்கள் அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவர்.
அடுத்த கட்டம்:
- குழு கலந்துரையாடல் (GD)
- நேர்முகத் தேர்வு (Interview)
பின்னர்:
- மருத்துவ பரிசோதனை
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.shipindia.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிகக் வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். SC, ST, PwBD, ESM பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.09.2025.