இன்று 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! அதி கனமழை கொட்டி தீர்க்குமாம்.. கவனம்..!

Rain 2025

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது..


தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதே போல் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலில் இன்று அதி கனமழை பெய்தற்கான ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது..

நாளை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவாரூர், அரியலூர், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

வரும் 23-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் 23-ம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. வரும் 24-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவையில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.  

Read More : பிஎம் கிசான்.. 21-வது தவணை பணம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா..? அப்படினா இது கட்டாயம்..!! வெளியான அறிவிப்பு..!!

RUPA

Next Post

மட்டன் குழம்பில் வயாகரா மாத்திரை.. சுதாரித்த கணவனுக்கு கடைசியில் இப்படியா நடக்கனும்..!! கதிகலங்க வைத்த காதல் மனைவி..

Tue Oct 21 , 2025
Viagra pill in mutton gravy.. Is this what will happen to the reformed husband in the end..!
Sex 2025 5

You May Like