டெல்லி செங்கோட்டைக்குப் அருகே ஏற்பட்ட கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக, பத்தன்கோட்டைச் சேர்ந்த ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 45 வயதான டாக்டர் ரயீஸ் அஹ்மது பட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில், அவருக்கும் மற்றும் வெடிப்புக்கு பொறுப்பானதாக கைது செய்யப்பட்ட டாக்டர் உமர் நபி ஆகியோருக்கிடையே தொடர்புகள் இருந்ததாக அதிகாரிகள் கூறியதால், அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
டாக்டர் ரயீஸ் அஹ்மது பட் தற்போது பத்தன்கோட்டில் உள்ள வைட் மெடிக்கல் கல்லூரியில் பணியாற்றுகிறார். அவர் 2020 முதல் 2021 வரை ஹரியானாவில் உள்ள சர்ச்சைக்குரிய அல்-பலாஹ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியிருந்தார். இதே பல்கலைக்கழகத்தில்தான் டாக்டர் உமர் நபியும் இந்த தாக்குதலுக்கு முன்னர் பணிபுரிந்தார். பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பிறகும், அங்குள்ள சில பணியாளர்களுடன் டாக்டர் பட் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கலாம் என்று விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
அவர் “வைட்-காலர்” (white-collar) பயங்கரவாத வலையமைப்பில் எந்த வகையிலாவது பங்கை வகித்தாரா என்பதை உறுதி செய்வதற்காகவே அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.. இந்த வலையமைப்பு, ஜெய்ஷ்-இ-மொஹம்மது (Jaish-e-Mohammed) மற்றும் அன்சார் ஃகஸ்வத்-உல்-ஹிந்த் (Ansar Ghazwat-ul-Hind) ஆகிய தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், மிக உயர்ந்த கல்வியுடன் உள்ள தொழில்முறை நிபுணர்களை மறைமுக தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்துவதற்காக ஆட்சேர்ப்பு செய்திருக்கிறார்களா என்பதை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மிக உயர்ந்த கல்வியாளர்களை இரகசிய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆட்சேர்ப்பு செய்திருக்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆய்ந்து வருகின்றனர்.
நேற்று இந்த விசாரணை வட்டாரம் மேலும் விரிவடைந்தது. டெல்லி போலிஸ் ஸ்பெஷல் செல் அதிகாரிகளும், மத்திய விசாரணை அமைப்புகளும் இணைந்து ஹரியானாவின் தவ்ஜ் மற்றும் நூஹ் பகுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தினர். இந்த நடவடிக்கையில், டாக்டர் உமர் தொடர்புடைய மேலும் ஒரு மருத்துவரும், ஒரு எம்பிபிஎஸ் மாணவரும் தடுப்பில் எடுக்கப்பட்டனர். விசாரணையின் போது, “மொஹம்மது” என அடையாளம் காணப்பட்ட மாணவரும், சீனாவில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர் முஸ்தாக்கீமும், டாக்டர் உமரை அறிந்ததாக அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டனர்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், அல்ஃபலாஹ் மெடிக்கல் கல்லூரியின் பழைய மாணவரான டாக்டர் ரிஹான் கைது செய்யப்பட்டார். இதனால், அந்த கல்வி நிறுவனத்தைச் சுற்றியுள்ள விசாரணை மேலும் வலுப்படுத்தப்பட்டது.
மற்றொரு மருத்துவரான முஜம்மில் ஷக்கீல் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் இருந்து சுமார் 2,900 கிலோ அளவிலான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.. இதில், தற்காலிக குண்டுகள் தயாரிக்கப் பயன்படும் பொருட்களும் இருந்தன. இதை தொடர்ந்துஅல்ஃபலாஹ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஷக்கீல் பின்னர் கைது செய்யப்பட்டார்.
அதற்குப் பிறகு, அவருடன் தொடர்பில் இருந்து டாக்டர் ஷாஹீன் ஷாஹித் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-மொஹம்மது அமைப்பின் இந்தியாவில் பெண்கள் பிரிவை உருவாக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறார்.
பல மருத்துவர்களின் கைது மற்றும் தொடர்ந்து நடைபெறும் விசாரணைகள் காரணமாக, அல்ஃபலாஹ் பல்கலைக்கழகமும் அதன் மருத்துவமனையும் பயங்கரவாத விசாரணையின் மையமாக மாறியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சேர்ப்பு முறைகள் மற்றும் உள்ளக தொடர்பு வலயம் குறித்து அதிகமான சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் நிதி அமைப்பு மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை (ED) நிதி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Read More : பீகார் படுதோல்வி.. அரசியலில் இருந்து விலகுவதாக லாலு மகள் ரோகிணி அறிவிப்பு..!



