மகிழ்ச்சி..! ரயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலை குறைப்பு…! இன்று முதல் அமலுக்கு வருகிறது…!

rail water 2025

ரயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.


ரயில் பயணத்தின் போது, பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையங்களிலும், ரயில்களில் “ரயில் நீர்” என்ற தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ரயில் நீர் பாட்டில், இந்திய ரயில்வேயால் வழங்கப்படும் ஒரு பிராண்டட் குடிநீர் பாட்டில் ஆகும். இது பயணிகளுக்கு வசதியாக ரயில்வே வளாகத்தில் விற்கப்படுகிறது. ரயில் நீர் பாட்டில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15-க்கும், அரை லிட்டர் பாட்டில் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ரயில் நிலையங்கள், ரயில்களில் விற்கப்படும் “ரயில் நீர்” பாட்டில் விலையை ரூ.1 குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து, ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை: ரயில் நிலையங்களில் விற்கும் ரயில் நீர் பாட்டில் மற்றும் இதர தண்ணீர் பாட்டில் விலை ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் நீர் ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ரூ.14 ஆகவும், அரை லிட்டர் பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9 ஆகவும் விற்கப்பட உள்ளது. மேலும், இதர தண்ணீர் பாட்டில் விலையும் ஒரு ரூபாய் குறைக்கப்படவுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆக்ரோஷமாக விளையாடிய அபிஷேக்-கில் ஜோடி!. பாகிஸ்தான் வீரர்களை பந்தாடி அபாரம்!. மைதானத்தில் வாக்குவாதம்!. வைரல் வீடியோ!

Mon Sep 22 , 2025
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கைக்குலுக்கல் விவகாரம் பெரும் பேசுப்பொருளாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மீண்டும் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் […]
ind vs pak abhishek sharma

You May Like