3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது – சென்னை உயர்நீதிமன்றம்!

MPMADRASHIGHCOURT1

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் ரஞ்சிதா என்பவர் 3வது பிரசவத்திற்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பும் சலுகைகளும் வழங்கக் கோரி ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்தார்.. இந்த விண்ணப்பத்தை நிராகரித்து முன்சீப் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ரஞ்சிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்..

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணிக்கு சேரும் முன்பே 2 குழந்தைகளை பெற்ற நிலையில், 3வது முறையாக கருவுற்ற நிலையில் பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டினர். எனவே ரஞ்சிதாவுக்கு மகப்பேறு விடுப்பை வழங்க வேண்டும் என்று முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டனர்..

மேலும் குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது, மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

RUPA

Next Post

“ஹேய்.. சீக்கிரம் வாடா”..!! உல்லாசத்திற்கு அழைத்த ஆண்ட்டி..!! ஆசையாக சென்ற இளைஞர்..!! வீட்டுக்குள் பதுங்கிய 6 பேர்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Fri Sep 5 , 2025
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உல்லாசத்திற்கு ஆசை காட்டி வரவழைத்து, ஒருவரை கத்தி காட்டி மிரட்டிப் பணம் பறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் (27) என்பவர், குந்தாப்புராவில் அப்துல் சவத் (28) என்பவருடன் நட்புறவு கொண்டிருந்தார். இந்த நட்பின் மூலம், அப்துல் சவத் அஸ்மா (42) என்பவரை சந்தீப் குமாருக்கு அறிமுகம் […]
Love 2025

You May Like