Flash : மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

anbumani ramadoss 1

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது..


இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி.. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.. மேலும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் தீர்வு வேண்டுமானால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இந்த நிலையில் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.. இந்த கடித்ததை எதிர்த்து ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.. இந்த நிலையில் இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 3  வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.. அப்போது வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என்று அன்புமணி தரப்பு வேண்டுகோள் விடுத்தது.. அப்போது எதிர் தரப்பினராக இல்லாத போது அதனை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டனர்.. மேலும் தேர்தல் ஆணையம் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Read More : இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜக.. சுயமரியாதை இல்லாத அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!

RUPA

Next Post

உலகின் மிக ஆழமான தங்கச் சுரங்கம்..! ஆண்டுக்கு 8,000 கிலோ தங்கம் உற்பத்தி..!

Mon Feb 2 , 2026
பூமியில் சில இடங்கள் மிகவும் தீவிரமானவை, அவற்றை பெரும்பாலான மக்களால் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு இடம் தான் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்த தங்கச் சுரங்கம். இது பெரும்பாலான மக்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆழமானது. இது பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 4 கிலோமீட்டருக்கும் மேல் நீண்டுள்ளது. இது பூமியில் உள்ள அனைத்து வானளாவிய கட்டிடங்களை விடவும் ஆழமானது. சுரங்கத் தொழிலாளர்கள் மிகவும் வெப்பமான மற்றும் சவாலான சூழ்நிலைகளில் […]
abundance gold coins massive cave 742252 37506

You May Like