லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக கடைசியாக சொந்த மண்ணில் விளையாடவுள்ள நிலையில், பயிற்சியின் போது கண்ணீர் விட்டு அழுத உணர்ச்சிப்பூர்வமான தருணம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
38 வயதான மெஸ்ஸி, தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ளார், அடுத்த ஆண்டு FIFA உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் தேசிய அணியிலிருந்து விடைபெறக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. இந்தநிலையில், மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர், FIFA உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் வெனிசுவேலாவை எதிர்கொண்டனர். இந்தப் போட்டியே, அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னர் அர்ஜென்டினா தாயக மண்ணில் விளையாடும் கடைசி போட்டி என்பதால், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
எட்டு முறை Ballon d’Or விருது வென்ற மெஸ்ஸி, எஸ்டாடியோ மொனுமென்டல் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மெஸ்ஸி பெயரை கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். அப்போது பயிற்சியி ஈடுபட்டிருந்த மெஸ்ஸி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். அந்த தருணம், மெஸ்ஸிக்கான மரியாதையையும், அவர் அர்ஜென்டினா அணிக்காக செய்த மிகப்பெரிய சாதனைகளுக்கான நன்றி உணர்வையும் பிரதிபலித்தது. 2022 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவை உலகக் கோப்பை வெற்றிக்கு வழிவகுத்த தலைவரைக் கொண்டாடும் வகையில், அவர்களின் கேப்டனை கௌரவிக்கும் வகையில் ஒரு பெரிய பதாகை பறக்கவிடப்பட்டது.
எல்லா காலங்களிலும் மிகச் சிறந்த வீரர் என்று கருதப்படும் மெஸ்ஸி, நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா உடன், 38 வயதில் தனது கடைசி தாயக தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாடி வருகிறார். அர்ஜென்டினா, ஏற்கனவே தகுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இதனுடன் பிரேசில் மற்றும் ஈக்வடார் அணிகளும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளனர்.
போட்டிக்கு முன்பு எஸ்டாடியோ மொனுமென்டல் மைதானத்தில் மெஸ்ஸி கூறியதாவது, இது மனம் நிறைந்த ஒரு போட்டியாக இருக்கும் என்று உணர்வுப்பூர்வமாக பேசியிருந்தார். “இது எனக்காக மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டி ஆகும், ஏனெனில் இது என் கடைசி தகுதிச்சுற்றுப் போட்டி. அதனால் என் முழு குடும்பமும் என்னுடன் இருக்கும்,” என்று மெஸ்ஸி, இன்டர் மயாமி அணியுடன் நடைபெற்ற லீக்ஸ் கப் இறுதி போட்டிக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, இது தேசிய அணிக்காக மெஸ்ஸி விளையாடும் கடைசி உள்ளூர் போட்டியாக இருக்கலாம் என்றும் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய ஸ்கலோனி, தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஜாம்பவானுடன் மைதானத்தைப் பகிர்ந்து கொண்டதையும், பின்னர் உலகக் கோப்பையை ஒன்றாக வென்ற மகிழ்ச்சியை அனுபவித்ததையும் உணர்ச்சிவசப்பட்டு நினைவு கூர்ந்தார்.
“நீ அழுகிறாயா? அது என் நோக்கமல்ல,” என்று அவர் கூறினார், அதற்கு பத்திரிகையாளர் பதிலளித்தார், “நீங்கள் எனக்கு என் வாழ்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தீர்கள்.””நான் அவருடன் விளையாடினேன், அவருக்கு பந்தை அனுப்புவது சிறப்பு வாய்ந்தது,” என்று அவர் கூறினார். “உலகக் கோப்பையில் அவருடன் இருப்பதும், அவர் கோப்பையை உயர்த்துவதைப் பார்ப்பதும் உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டும் ஒன்று. காலப்போக்கில், அதன் அர்த்தம் என்ன என்பதை நாம் அனைவரும் இன்னும் அதிகமாக உணர்வோம். நிச்சயமாக இது அர்ஜென்டினாவில் அவரது கடைசி ஆட்டமாக இருக்காது – அவர் விரும்பினால் அவருக்கு இன்னொரு போட்டி இருப்பதை உறுதி செய்வோம், ஏனென்றால் அவர் அதற்கு தகுதியானவர்,” என்று அவர் மேலும் கூறினார். இன்று (வெள்ளிக்கிழமை) வெனிசுலாவுடன் விளையாடிய பிறகு, மெஸ்ஸியும் அவரது குழுவினரும் அடுத்த செவ்வாய்க்கிழமை ஈக்வடாருக்குச் சென்று CONMEBOL தகுதிச் சுற்றுப் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளனர்.