விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க கட்டுப்பாடு விதிப்பு..! மீறினால் நடவடிக்கை

ganesha 2025

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது.


சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு. வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த /மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகளை அழகு படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்கண்ட இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: மகிழ்ச்சி செய்தி…! பொதுமக்களுக்கு பட்டா… வந்தது புதிய அறிவிப்பு…! தமிழக அரசு அரசாணை…!

Vignesh

Next Post

TCS 80,000 பணிநீக்கங்களா?. 15 நிமிடங்களில் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினார்கள்!. வேலையிழந்த ஊழியர் குமுறல்!.

Mon Aug 11 , 2025
இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது இளைஞர்களை அதிர்ச்சியடைச் செய்தது. ஆனால் இந்த அதிர்ச்சி செய்தி மறைவதற்குள், அங்கு பணிபுரிவோருக்கு ஓர் உற்சாக செய்தியை அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அறிவித்திருப்பது தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதாவது, டிசிஎஸ் நிறுவனம் 80 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் ஆரம்பத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) […]
TCS layoff reddit 11zon

You May Like