ஓய்வுபெற்ற அக்னி வீரர்கள் எல்லை பாதுகாப்பு படையில் சேர வாய்ப்பு!… இடஒதுக்கீடு அளித்து மத்திய அரசு அறிவிப்பு!

ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு துணை ராணுவமான எல்லை பாதுகாப்பு படையில் சேருவதற்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அக்னிவீரர்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படையில் பணியாற்றலாம் . அதற்கு பிறகு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பணியில் நீட்டிக்கப்படுவர். மற்றவர்கள் வேறு வேலைக்கு செல்ல வேண்டும். தற்போது, அப்படி ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் திருத்தும் கொண்டுவந்துள்ளது.

எல்லை பாதுகாப்பு படையான பிஎஸ்எஃப் வீர்கள் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்யும் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வு பெற்ற அக்னி வீரர்கள் எல்லை பாதுகாப்பு படையில் சேரும்போது அவர்களுக்கு வயது வரம்பு மற்றும் 10 சதவீத இடஒதுக்கீடு ஆகிய சலுகைகள் வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

KOKILA

Next Post

முக்கிய அறிவிப்பு...! ஒகேனக்கல்‌ கூட்டு குடிநீர்‌ திட்டம் வரும் 14 முதல் 17-ம் தேதி வரை கிடையாது...!

Sat Mar 11 , 2023
தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌, கிருஷ்ணகிரி கோட்டத்தின்‌ மூலம்‌ பராமரித்து வரும்‌ ஒகேனக்கல்‌ கூட்டு குடிநீர்‌ திட்டத்தின்‌ மூலமாக தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பாலக்கோடு ஒன்றியத்தில்‌ 32 கிராம பஞ்சாயத்துகள்‌ மற்றும்‌ மாரண்டஅள்ளி நகர பஞ்சாயத்துகளுக்கு தினசரி குடிநீர்‌ வழங்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைதுறை தருமபுரி – ராயகோட்டை புதியச்சாலை விரிவாக்க பணிகள்‌ நடைபெற்று வருவதால்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வாரியத்தின்‌ பராமரிப்பில்‌ உள்ள ஒகேனக்கல்‌ கூட்டு குடிநீர்‌ திட்டத்தில்‌ குடிநீர்‌ […]
images 2023 03 11T053705.986

You May Like