ஆப்ரேஷன் சிந்தூருக்கு பழிக்குபழி!. இஸ்லாமாபாத்தில் இந்திய தூதர்களுக்கு துன்புறுத்தல்!. சிலிண்டர், நீர், செய்தித்தாள் விநியோகம் நிறுத்தம்!

Op Sindoor Pak harasses 11zon

ஆப்ரேஷன் சிந்தூருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களுக்கு சிலிண்டர், நீர், செய்தித்தாள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை விநியோகத்தை நிறுத்தி துன்புறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூரின் போது ஏற்பட்ட பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களை துன்புறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, மேலும் அவர்களின் வீடுகளிலும் நகரத்தில் உள்ள இந்திய உயர் அலுவலகத்திலும் செய்தித்தாள்கள் விநியோகத்தை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு நாளிதழ்கள் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைகள், தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உத்தரவாதம் செய்யும் இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையின் மீறல்களாகக் கருதப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியபோதும் இது நடந்துள்ளது. அந்த நேரத்திலும் இந்திய தூதர்கள் இதேபோன்ற முறையில் துன்புறுத்தப்பட்டனர்,” என்று இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு வட்டாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல், உள்ளூர் விற்பனையாளர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் இந்திய அதிகாரிகளுடன் விநியோகத்திற்காக ஒத்துழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்திய தூதர்கள் எரிவாயு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பாக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைகள் தூதரக ஊழியர்களை அச்சுறுத்தும் முயற்சியாகக் கருதப்படுகின்றன.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்திய தூதர்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அதில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பின்தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தூதரக ஊழியர்களை அச்சுறுத்தும் முயற்சியாகக் கருதப்பட்டது. இந்திய தூதரக குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நுழைவுகள் பற்றிய தகவல்கள் வந்தன. உள்ளூர் ஊழியர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர், இதனால் விரோதமான பணிச்சூழல் உருவாகியுள்ளது.

Readmore: 12 வயது சிறுமியை 3 மாதங்களில் 200 பேர் பலாத்காரம் செய்த கொடூரம்..!! வீட்டை விட்டு ஓடி வந்ததால் நேர்ந்த சோகம்..!!

KOKILA

Next Post

உஷார்!. ஆப்பிள் ஜூஸ் குடித்தால் இவ்வளவு ஆபத்தா?. எச்சரிக்கும் நிபுணர்கள்!.

Tue Aug 12 , 2025
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கினாலும், தினமும் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது குறிப்பாக வயதானவர்களின் உடல்நலனில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் பரவலாக பருகப்படும் ஆப்பிள் ஜூஸ், இன்று பெரியவர்களிடையே ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பருக வேண்டிய ஒரு பானமாக மாறியுள்ளது. ஆப்பிள் ஜூஸ் நீரேற்றம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும் அதிசய பானம் என்றாலும், அதில் உள்ள இயற்கை சர்க்கரைகள் மற்றும் குறைந்த […]
apple juice 11zon

You May Like