தனது தாயார் இறுதி ஊர்வலத்தின் போது ராபர்ட் மாஸ்டர் அழுதபடி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடன அமைப்பாளராக இருந்துள்ளார். ஆரம்பத்தில் பிரபு தேவாவின் டான்ஸ் குழுவில் பணியாற்றிய அவர், பின்னர் தன்னிச்சையாக நடன இயக்குநராக வளர்ந்து, கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கினார்.
இருந்தபோதும், ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து அவர் காணாமல் போனார். திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதையடுத்து, வனிதாவுடன் இணைந்து “மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்” என்ற படத்தில் நடித்தார் ராபர்ட். வனிதா இயக்கிய இப்படத்தில் இருவரும் முன்னர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பின்னணியுள்ளதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ராபர்ட் மாஸ்டர் எங்கேயும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் ராபர்ட் மாஸ்டரின் தாயார் மரணம் அடைந்துள்ளார். மிகவும் சோகமான அந்த தருணத்தில், அவரது இறுதி ஊர்வலத்தின் போது ராபர்ட் மாஸ்டர் அழுதபடி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தாயின் நினைவாக, தன் உணர்வுகளை நடனமாக வெளிப்படுத்திய அவர், பார்த்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “தாயை இழந்த வேதனை நடனமாக வெளிப்படுகிறது” என பதிவிட்டனர். மற்றொரு பயனர் “உணர்ச்சியை காட்டும் விதமாக ஒரு கலைஞனின் வேதனை” என்றெல்லாம் பதிவுகள் இடுகின்றனர்.
Read more: Flash: துணை ஜனாதிபதி தேர்தல் எப்போது..? சற்றுமுன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!