மருத்துவர்கள் உதவியின்றி பித்தப்பை அறுவை சிகிச்சை செய்த ரோபோ!. மருத்துவத் துறையில் புதிய முயற்சி!.

Robot gallbladder surgery 11zon

உலகின் முதன்முறையாக மருத்துவர்களின் உதவியின்றி மிகமிக நுட்பமான சிக்கலான பித்தப்பை அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட ரோபோவின் செயல் மருத்துவத் துறையில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.


ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தற்போதுள்ள அறுவைச் சிகிச்சை ரோபோக்கள், சிகிச்சையை மேற்கொள்வதற்காக அறுவை சிகிச்சை மருத்துவர்களால் தொலைவிலிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் புதிய அமைப்பு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, சுயமாக முடிவுகள் எடுத்து, அறுவைச் செயல்பாடுகளில் எதிர்பாராத சிக்கல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது என்று இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆக்செல் கிரீகர் (Axel தெரிவித்தார்.

மேலும் ரோபோவை ஒரு வாகனத்துடன் ஒப்பிட்ட விஞ்ஞானி கிரீகர்அது “எந்த சாலையிலும், எந்த சூழ்நிலையிலும் தானாக ஓடக்கூடிய வாகனத்தைப் போலவே” செயல்படுகிறது என்றும் “அது எதிர்கொள்ளும் எந்தச் சூழ்நிலைக்கும் புத்திசாலித்தனமாகப் பதிலளிக்கிறது,” என்றும் அவர் கூறினார். “இந்த முன்னேற்றம், குறிப்பிட்ட அறுவை சிகிச்சை பணிகளைச் செய்யக்கூடிய ரோபோக்களிலிருந்து, அறுவை சிகிச்சை முறைகளை உண்மையிலேயே புரிந்துகொள்ளும் ரோபோக்களுக்கு நம்மை நகர்த்துகிறது,” என்று அவர் கூறினார்.

SRT-H ரோபோவுக்கு, language-guided imitation learning மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது இறந்த பன்றியின் உடலில் (pig cadavers)மருத்துவர்கள் மேற்கொண்ட பித்தப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சைகளை வீடியோவாக பதிவு செய்து, அவற்றின் அடிப்படையில் ரோபோவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக, Science Robotics இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த ரோபோ, வெவ்வேறு கட்டமைப்புகள் கொண்ட எட்டு பன்றிகளின் பித்தப்பைகள் மற்றும் கல்லீரல்கள் (livers) மீது பரிசோதிக்கப்பட்டது. இந்த உடற்கூறுகள், உயிரிழந்த விலங்குகளில் இருந்து அகற்றப்பட்டவை எனவும் இந்த வகையான பல்வேறு மாதிரிகள் மூலம், ரோபோவின் திறன் மற்றும் செயல்திறனை பலவிதமான சூழ்நிலைகளிலும் பரிசோதிக்க முடிந்தது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பித்தப்பையை கல்லீரலில் இருந்து பிரிப்பது பல நிமிடங்கள் ஆகும் என்றும், இதில் பிடித்தல், கிளிப்பிங் (இணைதல்), வெட்டுதல் போன்ற பலவகை கருவிகள் பயன்படுத்தப்படுவதாகவும், இவை அனைத்தும் உண்மையான அறுவைச் செயல்முறைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் திறன்கள் எனவும், மேலும் இது முடிவெடுத்தல் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்மை மாற்றும் திறனையும் (adaptation) கொண்டிருக்க வேண்டியதாகும் எனவும்,
ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட்ட பன்றி உறுப்புகள் மற்றும் இரத்த நாளங்கள், அவை தோற்றம் மற்றும் உடல் அமைப்பில் பெரிதும் மாறுபட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த வகையான மாறுபாடுகள், மனிதர்களில் நடைபெறும் அறுவைச் சிகிச்சைகளில் சந்திக்கப்படும் பல்வகையான உடல் கட்டமைப்புகளைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர்கள் கூறினர்.

ரோபோ, அறுவைச் சிகிச்சைகளில் 100% துல்லியத்துடன் செயல்பட்டது எனவும் எனினும், மனித அறுவை சிகிச்சை மருத்துவரை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனால், ரோபோவின் துல்லியம் உறுதி செய்யப்பட்ட போதும், அதன் வேகத்தை மேம்படுத்துவது எதிர்கால மேம்பாட்டு நோக்காகும்.

வணிகரீதியாக கிடைக்கக்கூடிய அறுவைச் சிகிச்சை ரோபோக்களில், Intuitive Surgical நிறுவனத்தின் da Vinci Surgical System முக்கியமானதாகும். இந்த ரோபோ முறை, 2000ஆம் ஆண்டு அமெரிக்காவின் FDA அனுமதி பெற்றதிலிருந்து, உலகளவில் 1.2 கோடியுக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தொலையிலிருந்து அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இயக்கக்கூடிய முறையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

SRT-H ரோபோவுக்கு மாறாக, da Vinci அறுவைச் சிகிச்சை முறை, அதன் இயக்கங்களை முழுமையாக மனித அறுவை மருத்துவரின் தொலைநிலை கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்படுத்துகிறது. அதாவது, da Vinci அமைப்பு தானாக முடிவெடுக்க முடியாது. அதன் ஒவ்வொரு நகர்வும் ஒரு மருத்துவரால் நேரடியாக வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் SRT-H ரோபோ செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தானாக முடிவெடுத்து, செயல்களில் சுயமாக செயல்படுகிறது, எனவே இது ஒரு புதிய பரிணாமத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

உலகளாவிய அறுவைச் சிகிச்சை ரோபோடிக்ஸ் சந்தை, ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும், 2024ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 27 லட்சம் (2.7 மில்லியன்) ரோபோ அடிப்படையிலான அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், Baird நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் டேவிட் ரெஸ்காட் மதிப்பீடு செய்துள்ளார். இது, இந்த துறையில் வேகமான வளர்ச்சியும், பெரும் முதலீட்டுப் பொழிவும் உள்ளதை வெளிப்படுத்துகிறது.

இறுதியில், தானியங்கி அறுவைச் சிகிச்சை ரோபோக்கள், அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றாக்குறையை சமாளிக்க உதவலாம். மனித பிழைகளை குறைக்க முடியும். மாற்றுத்திறன் வாய்ந்த, நிலையான மற்றும் உயர் தர மருத்துவ சேவையை, போதிய மருத்துவ வசதிகள் இல்லாத பகுதிகளிலும் வழங்க முடியும். இதனால், சிகிச்சை தரம் மேம்படும் என்பதோடு, உலகளாவிய மருத்துவ அணுகல் சமமானதாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆராய்ச்சிக்கு Advanced Research Projects Agency for Health (ARPA-H),
National Science Foundation (NSF), மற்றும் National Institutes of Health (NIH) ஆகிய அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன. இந்த முக்கியமான ஆதரவுகள், மருத்துவ ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவில் முன்னேற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைகின்றன.

Readmore: 3-ஆம் வகுப்புக்கு ரூ.2.1 லட்சம் Fees? நர்சரி கட்டணத்திற்கு EMI.. CoinSwitch இணை நிறுவனரின் பதிவு வைரல்..

KOKILA

Next Post

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது.. எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்..!!

Fri Jul 11 , 2025
My name should not come after Anbumani's name.. Ramadas warns..!!
d8080873e6bc6caa45bf5deca86bf526 2

You May Like