சிறகடிக்க ஆசை: கிரீஷின் அம்மா ஆவியை வைத்து திட்டம் போடும் ரோகிணி.. குடும்பத்தில் வெடிக்கும் சண்டை..! என்ன செய்ய போகிறாள் மீனா..?

siragadika aasai

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில் ரோகிணியை பார்வதி வீட்டுக்கு கிளம்பி வர சொல்கிறாள் விஜயா. அங்கு சிந்தாமணியும் வரவும் கிரீஷ் பற்றி பேச ஆரம்பிக்கிறாள். அந்த பூ விற்கிறவ மனோஜ் கூட அந்த பையனை நெருங்கி பழகி வைக்க முயற்சி பண்றாள். அப்படி நடந்தால் கிரீஷை நிரந்தரமா நம்ம வீட்ல தங்க வைக்கலாம் சொல்லி திட்டம் போடுறாள். அதுனால நீயும், மனோஜும் அந்த பையனை உங்க பக்கத்துலயே நெருங்க விடாதீங்க என்கிறாள்.


உடனே ரோகிணியும் சரிங்க அத்தை என்று சொல்கிறாள். உடனே சிந்தாமணி அந்த பையன் நைட் எல்லாம் தூங்காமல் அலைஞ்சுட்டு இருக்கான் சொன்னீங்கள்ள. ஒருவேளை அவனோட அம்மா ஆக்ஸிடென்ட்ல இறந்து போனதால ஆவியாய் சுத்துதோ எனக்கேட்டு பயமுறுத்துகிறாள். விஜயாவும் என்ன சொல்றீங்க என்று பதறுகிறாள். அதனை தொடர்ந்து ரோகிணியிடம் அந்த பையனை உங்க பக்கத்துல விடாமல் ரூமை பூட்டிகோங்க என்கிறாள்.

அதன்பின்னர் மகேஸ்வரி வீட்டுக்கு ரோகிணி வர, வித்யா, மீனாவையும் அங்கு வர வைக்கிறாள். இருவரும் வந்து விட பார்வதி வீட்டில் நடந்த மீட்டிங் பற்றியும் கூறுகிறாள். இப்போதைக்கு கிரீஷுக்கு எதிரா ஆண்ட்டி எதுவும் பண்ண மாட்டாங்க. ஏன்னா அவனோட அம்மா ஆவியாய் சுத்துறாங்கன்னு அவளுக்கு டவுட் வந்து இருக்கு என்கிறாள். மீனா அதனைக்கேட்டு விட்டு, இப்போ என்ன பண்ண சொல்ற. என்னை கிரீஷ் அம்மா ஆவி மாதிரி நடிக்க சொல்றீயா? என்கிறாள்.

ரோகிணிக்கு அதனைக்கேட்டு விட்டு ஒரு ஐடியா தோன்றுகிறது. உடனே தாங்க்ஸ் மீனா எனக்கு நல்ல யோசனை சொல்லி இருக்கீங்க என்கிறாள். இதனையடுத்து கிரீஷின் அம்மா ஆவியை வைத்து ஒரு திட்டம் போடுகிறாள் ரோகிணி. இந்தப்பக்கம் நீத்து அனுப்பி போட்டோவால் அப்செட்டில் இருக்கும் ஸ்ருதியை, ரெஸ்டாரண்ட் விட்டு வந்ததும் ரவி சமாதானம் செய்கிறான். எல்லாருக்கும் அனுப்பும் போது, நீ சந்தோஷப்படுவன்னு உனக்கும் அனுப்பி வைச்சு இருக்காங்க. அதை பெருசு பண்ணாத என்கிறான்.

ஆனாலும் ஸ்ருதி, எனக்கு உன்மேல சந்தேகம் இல்லை. அதே நேரம் அந்த நீத்து சாதாரணமான ஆள் கிடையாது. எல்லாமே திட்டம் போட்டு பண்றாள் என்று கூறுகிறாள். அவளிடம் நான் இப்போ கோவா ஃபுட் பெஸ்டிவலுக்கு போகவா, வேணாமா? என்னோட எதிர்காலத்துக்கு இது ரொம்பவே சப்போர்ட்டா இருக்கும் என்கிறான் ரவி. அதன்பின்னர் ஸ்ருதி, நீ போயிட்டு வா. ஆனால் அந்த நீத்துக்கிட்ட கேப் விட்டே இரு. அவள் அதையும் வைச்சு நம்ம ரெண்டு பேருக்கும் இடைல ஏதாவது பிரச்சனை வர வைப்பாள் என்று சொல்கிறாள் ஸ்ருதி. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more: “முஸ்லீம் லீக்கிற்கு அடிபணிந்து வந்தே மாதரத்திற்கு ‘அநீதி’ இழைத்த நேரு..” பிரதமர் மோடி கடும் கண்டனம்

English Summary

Rohini plans to use the spirit of Kirish’s mother.. A fight breaks out in the family..! What is Meena going to do..?

Next Post

காபி குடித்தால், வயதாவதை மெதுவாக்கலாம்..! ஆனால் சரியான அளவு குடித்தால் மட்டுமே!

Mon Dec 8 , 2025
உலகம் முழுவதும் அதிகம் விரும்பப்படும் பானங்களில் ஒன்று காபி. இதற்கு பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் இதை தூக்கத்தை களைப்பதற்காக அல்லது சக்தி பெறுவதற்காக குடிப்பார்கள். ஆனால் மனநலப் பிரச்சனைகள் கொண்டவர்கள் அளவோடு காபி குடித்தால், அவர்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ உதவக்கூடும் என்று புதிய ஆய்வு சொல்கிறது.. லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் தினமும் நான்கு கப் காப்பி வரை […]
coffee 2

You May Like