விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், கடந்த எபிசோடில் ரோகிணி ஷோரூமிலிருந்து கொண்டு வந்த பையில் பாம்பு பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது. இன்றைய எபிசோட்டில், யோகா கிளாஸுக்கு சென்ற விஜயா, அங்கு சிந்தாமணியை சந்தித்து சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். ஆனால் சிந்தாமணி “பாம்பு வந்த வீடு நல்லதல்ல” என்று கூறி, விஜயாவை மேலும் பதட்டமடையச் செய்கிறார். இதனால் பயந்த விஜயா, குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
இதற்கிடையில் முத்து, “அந்த சிந்தாமணியே பாம்பு மாதிரி அவங்க சொன்னதை நம்பாதீங்க!” என்று விஜயாவிடம் கூறுகிறான். அதே நேரத்தில் அண்ணாமலை தனது அம்மாவின் ஆலோசனைப்படி குலதெய்வக் கோவிலுக்குச் சென்று தீபாவளியையும் அங்குத் கொண்டாடுவோம் என்கிறார். அனைவரும் சம்மதிக்க, மனோஜ் மட்டும் வியாபார நிமித்தம் வரமுடியாது என மறுக்கிறார்.
இதே சமயம், ரோகிணிக்கு புதிய பிரச்சனை துவங்குகிறது. ஸ்ருதியின் அம்மா சுதா போன் செய்து, தன்னிடம் வாங்கிய 2 லட்சத்தை உடனே திருப்பித் தருமாறு கோருகிறார். பணத்தை தராத பட்சத்தில் விஜயாவிடம் கடன் விஷயத்தை வெளிப்படுத்துவேன் என சுதா ரோகிணியை பிளாக்மெயில் செய்கிறார். இதனால் மனஅழுத்தத்தில் விழுந்த ரோகிணி, இதை சமாளிக்க புதிய திட்டம் தீட்டுகிறாள்.
இதற்கிடையில், ஸ்ருதியின் ரெஸ்டாரண்டிற்கு இரண்டு பெண்கள் வருகிறார்கள். அந்தப் பெண் ஸ்ருதியுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அங்கு மீனா வருகிறார். மீனா தொடங்கியுள்ள புதிய ‘பொக்கே’ பிசினஸை அந்த பெண் கவனிக்கிறார். அதைப் பார்த்து ஆர்வமாக விசாரிக்க, ஸ்ருதி உடனே மீனாவின் புதிய பிசினஸ் பற்றி பெருமையாக சொல்லிக் கொடுக்கிறார். அதை கேட்ட அந்த பெண், “நான் புதிய அப்பார்ட்மெண்ட் ஒன்றைக் கட்டி வர்றேன்… அதுக்குப் பூ நீங்க தான் வைக்கணும்” என்று நேராகக் கேட்டுக் கொள்கிறார்.
பின்னர் அவர்கள் ஹோம் அப்ளையன்ஸ் வாங்கப் பேசும்போது, மீனா உடனே ரோகிணியின் ஷோரூமை பரிந்துரைக்கிறார். அதற்கும் அந்தப் பெண் சம்மதிக்கிறார். இதனால் ரோகிணியின் ஷோரூமுக்கு புதிய வாடிக்கையாளர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகிறது. இனி வரும் எபிசோடுகளில், ரோகிணி எதிர்கொள்ளும் பிளாக்மெயில் பிரச்சனைக்கு இந்த புதிய வியாபாரம் தீர்வாகுமா அல்லது புதிய சிக்கலை உருவாக்குமா என்பதே முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.



