சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில் ரோகிணியும் மீனாவும் மகேஷ்வரி வீட்டில் இருக்க, அந்த சமயம் வித்யா அங்கு வருகிறாள். மீனாவை பார்த்து ஷாக்காகி, நீங்க கிரீஷை பார்க்க வந்தீங்களா? ரோகிணி நீ மகேஸ்வரியை பார்க்குறதுக்கு வந்து இருக்க எனக் கேட்கிறாள். இதையெல்லாம் கேட்ட மீனா தனக்கு கிரிஷ் அம்மா இப்போ எங்க இருக்காங்கனு தெரியும் என்று சொன்னதும் வித்யா ஷாக் ஆகிறார்.
கிரிஷ் அம்மா தற்போது சென்னையில் தான் இருக்கிறார், இவ தான் அந்த கல்யாணி என்று ரோகிணியை பார்த்து மீனா சொன்னதைக் கேட்டதும் பேரதிர்ச்சி அடைகிறார் வித்யா. நீங்க கூட என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டீங்கள்ல என வித்யாவிடம் கோபம் கொள்கிறார். பின்னர் ரோகிணியிடம் எப்போ தான் உண்மையை சொல்லப்போற என மீனா கேட்க, அதற்கு அவர் கிரிஷுக்கும் மனோஜுக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டால் தான் நான் உண்மையை சொல்ல முடியும் என்கிறாள்.
கிரிஷ் இங்கேயும், மனோஜ் அங்கேயும் இருந்தால், எப்படி அவர்களுக்குள் நெருக்கம் வரும் என கேட்கும் மீனா, நீ கற்பனையிலேயே உருவாக்கிய அம்மா இருந்தா என்ன, செத்தால் என்ன என மீனா கேட்க, உடனே கிரிஷின் அம்மா கல்யாணி வெளிநாட்டில் இறந்துவிட்டதாக சொல்லி கிரிஷை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வர இருப்பதாக ரோகிணி சொல்ல, சரி ஏதாவது பண்ணித் தொல என கூறுகிறார் மீனா.
இதையடுத்து என்ன ஆனது? கிரிஷின் அம்மா இறந்த விஷயத்தை சொன்னதும் வீட்டில் இருந்தவர்கள் கிரிஷை ஏற்றுக்கொள்வார்களா? விஜயாவின் எதிர்ப்பை மீறி கிரிஷை வீட்டுக்குள் சேர்த்துக்கொள்வார்களா? முத்து எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



