இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனமாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
இன்றைய காலகட்டத்தில், மக்கள் மின்சார வாகனங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், ஒவ்வொரு பைக் மற்றும் கார் நிறுவனங்களும், அவற்றின் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, அதன் முதல் மின்சார பைக்கை அடுத்த ஆண்டில்(2026) அறிமுகம் செய்ய உள்ளது. அதன் விவரங்களை காணலாம்.
இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனமாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு சாலையில் போகும் போது, கம்பீரமாகவும், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு கெத்தாக இருப்பதால் பலரும் அதையே விரும்புகிறார்கள். இந்த நிறுவனம் இளைஞர்களை கவரும் வகையில் ஏராளமான மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மின்சார வாகனம் தயாரிக்கும் பணியிலும் இறங்கிவிட்டது. 2024 EICMA கண்காட்சியில் இந்த பைக் குறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த கண்காட்சியில் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை காட்சிக்கும் வைத்திருந்தது. 2026-ம் ஆண்டில், ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் வாகனம் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறம்பம்சங்கள் என்ன? பைக்கின் வடிவமைப்பு பேட்டரி பேக்கை சீராக ஒருங்கிணைக்கிறது. இந்த மாடல் ஒரு தனித்துவமான சீட் மற்றும் ஒரு கிளீனாக பொருத்தப்பட்ட பின்புற சீட்டை கொண்ட ஒரு கிளீனான பக்கவாட்டு புரோஃபைல் உடன் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இது அதன் ஒட்டுமொத்த விண்டேஜ் ஈர்ப்பை நிறைவு செய்கிறது.
இது ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, கூகுள் மேப்ஸ் ஒருங்கிணைப்பு மற்றும் கால்கள் மற்றும் SMS க்கான அறிவிப்புகள் போன்ற பிற செயல்பாடுகளை வழங்கும் 3.5-இன்ச் வட்ட டச் ஸ்கிரீன் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை உள்ளடக்கியதாக உள்ளது. கூடுதலாக,எலெக்ட்ரிக் பைக் பல்வேறு பயனர் தேவைகளுக்கு ஏற்ப மூன்று சார்ஜிங் மோடுகளை – டிரிக்கிள், ஸ்டாண்டர்ட் மற்றும் ராபிட் – சப்போர்ட் செய்யும் வகையிலான ஒரு வசதியான வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜருடன் வருகிறது.
இந்நிலையில், ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக், சாலையில் ஓட்டி சோதனை செய்யப்பட்டள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கை 2026-ம் ஆண்டு தொடக்கதிலேயே முழு அளவில் தயாரிக்கும் பணி தொடங்கும் என தெரிகிறது.
Read more: இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனையெல்லாம் வரும்..!!



