பெங்களூரில் வசிக்கும் ஒரு இளைஞன் தனது மனைவியை கவனித்துக் கொள்ள வருடத்திற்கு ரூ.1.2 கோடி ஊதியம் வாங்கும் பணியை ராஜினாமா செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
ரெடிட் தளத்தில் அவர் பகிர்ந்த பதிவில், “நான் ஆண்டுக்கு 1.2 கோடி ஊதியம் தரும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பமானார். முதலில், வேலை சுமை அதிகமாக இருக்கும் என்பதால் மனைவியிடம் வேலையை விட சொன்னேன். ஆனால் அவள் தொடர்ந்து வேலை செய்ய விரும்பியதால், மாறாக நானே வேலையை விட்டு, அவளை தினமும் அருகில் இருந்து கவனிக்க முடிவு செய்தேன்” என கூறியுள்ளார்.
அவரின் இந்த பதிவில் சில மணி நேரங்களிலே வைரலானது. ஆயிரக்கணக்கானோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், “இது உண்மையான துணைவனின் அன்பும் பொறுப்பும் காட்டும் உதாரணம்” எனக் குறிப்பிட்டார். மற்ற சிலர் “பெரும் சம்பளத்தைத் துறப்பது எளிதல்ல; ஆனால் குடும்பம் முன்னிலைப்படுத்தப்படுவது பாராட்டுக்குரியது” என கருத்து தெரிவித்துள்ளனர்.
சில இணைய பயனாளர்கள், இந்த முடிவு பாலின பாகுபாட்டை உடைக்கும் ஒரு நல்ல முன்னுதாரணம் என்றும், ஆண்களும் குடும்ப பராமரிப்பில் முன்னிலை வகிக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது என்றும் பாராட்டுகின்றனர். இன்னும் சிலரோ இளைஞரின் செயல் முட்டாள் தனமானது என விமர்சித்து வருகின்றனர். அவரின் இந்த பதிவு ரெடிட் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read more: திமுக சார்பில் நடிகர் சூர்யா போட்டி..? இது லிஸ்ட்லயே இல்லையே.. ஸ்டாலின் போட்ட பலே கணக்கு..!!