கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்..!! தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்..!! விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Cow Farm 2025

தமிழ்நாட்டில் விவசாயம் சார்ந்த உபதொழில்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கால்நடை வளர்ப்பை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றும் நோக்கில், கறவை மாடுகள் வாங்குவதற்கு ‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்’ (TABCEDCO) மூலம் சிறப்பு கடன் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பால் உற்பத்தியைப் பெருக்குவதுடன், சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.


இந்த கடன் திட்டமானது ஆவின் எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அந்தந்த மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பது அவசியமாகும்.

கடன் தொகையை பொறுத்தவரை, தகுதியுள்ள ஒரு பயனாளிக்கு இரண்டு கறவை மாடுகள் வாங்குவதற்கு மொத்தம் 1.20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு மாட்டுக்கு 60,000 ரூபாய் என்ற கணக்கில் இந்தக் கடன் கணக்கிடப்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு வெறும் 7 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மொத்தத் தொகையில் பயனாளியின் பங்கு வெறும் 5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடனை மூன்று ஆண்டுகளுக்குள் (36 மாதங்கள்) எளிய தவணைகளில் திருப்பிச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்தக் கடன் உதவி வழங்கப்படும் என்பதால், ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read More : விஜய்யின் மாஸ்டர் பிளான்..!! அதிமுகவின் முக்கியப் புள்ளியை வளைத்துப் போட்ட தவெக..!! அதிர்ச்சியில் இபிஎஸ்..!!

CHELLA

Next Post

ஆதார் மையத்தில் அரசு வேலை..!! 282 காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் தான் இருக்கு..!!

Thu Jan 29 , 2026
இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக திகழும் ஆதார் அட்டையை நிர்வகிக்கும் ‘இந்திய தனித்துவ அடையாள ஆணையம்’ (UIDAI), நாடு முழுவதும் உள்ள அதன் சேவை மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இந்த மையங்களில், ‘ஆதார் சூப்பர்வைசர்’ மற்றும் ‘ஆபரேட்டர்’ பணிகளுக்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]
aadhar card

You May Like