பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. அதில், இந்தாண்டு பொங்கலுக்கு வழங்கியது போல், பலவித மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கலாமா? அல்லது 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கலாமா? என அரசு ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.