காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் சிறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை குறித்து இனிப்பான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய அவர், “அதிகாரத்தின் மீது அடக்குமுறையை விரும்பும் பாஜக அரசு, அடிமைத்தனமே அடையாளமாய் செயல்படும் அதிமுக அரசு ஆகியவற்றின் போக்குகளுக்கு மாற்றாக, திமுக அரசு சமூக நீதியை தளமாகக் கொண்டு செயல்படுகிறது என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1.15 கோடி பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1.73 லட்சம் பெண்கள் இதுவரை இந்த நிதியுதவியை பெற்று வருகின்றனர்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றும், அவை தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மனுக்களுக்கு எதிர்வரும் வாரங்களில் அல்லது அக்டோபர் மாதத்துக்குள் நேரடியாக வங்கிக் கணக்குகளில் தொகைச் செலுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதேபோல், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிருக்கு புதிய விலக்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் பெண்கள், மற்ற ஓய்வூதியத் திட்டங்களைப் பெறும் பெண்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் கட்டமாக பணம் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More : லாட்ஜில் ரூம் போட்ட இளம் காதல் ஜோடி..!! உல்லாசத்திற்கு பின் நடந்த மர்ம சம்பவம்..!! சென்னையில் அதிர்ச்சி..!!