கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனிடையே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்ற திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு தொடங்கியது.. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. மேலும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை பெற லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர்..
இந்த நிலையில் புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, www.ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Track Grievance-ஐ கிளிக் செய்யவும்.. புதிய பயனர் என்றால் New user? Sign up என்ற பகுதியில் பெயர், செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட்டு ஐடியை உருவாக்கவும்.. ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால், உங்கள் செல்போன் எண்ணை பதிவிட்டு உள்நுழையலாம்.. மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பித்த பெண்கள், தங்களின் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்..