ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்..
மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாக திறனற்ற விடியா திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம் போல் ஏறி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. சொத்து வரி, குடிநீர் வரி போன்ற வரிகள் திமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.. அதிமுக ஆட்சி அமைந்த உடன் மக்களின் சுமையை குறைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை இல்லாமல் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். +2 வரை படித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்
மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.8000-ல் இருந்து ரூ.12,000 வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும்..
தெருவோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.
விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்..
Read More : ”சசிகலா, ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வருவார்கள்..” அடித்து சொன்ன டிடிவி தினகரன்..! பரபரக்கும் அரசியல் களம்..!



