தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
இடைக்கால பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1471 கோடி ஒதுக்கீடு.
அரசு வேலைவாய்ப்பில் மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு
அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கும் ரூ.5463 நிதி ஒதுக்கீடு
TNWESafe தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு பாதுகாப்பு திட்டம்
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2171 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது..
சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மூலம் ரூ.101 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 8 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
40 ஆண்டுகளுக்கு மேலான குடிநீர் திட்டங்களை புதுப்பிக்க ரூ.809 கோடி ஒதுக்கீடு.
2030-ம் ஆண்டிற்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 9 லட்சம் வீடுகளை கட்டித்தர திட்டம்
40 புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் அமைக்க ரூ.291 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை உதவித்தொகை தரப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட்டில் மருத்துவத்துறை ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை ரூ.6374 கோடி ரூபாய் மக்களுக்கு செலவிடப்பட்டுள்ளது
12.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
36 லட்சத்திற்கும் அதிமான வேலைவாய்ப்புகளை உறுதி செய்துள்ளது தமிழக அரசு
தொழிலாளர் நலத்துறை ரூ.1,996 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.



