இத்தனை கோடி, சம்பளம் வாங்குகிறாரா சுந்தர் பிச்சை!!! கூகிள் சி.இ.ஓ. என்றால் சும்மாவா?

நமக்கு எந்த ஒரு விஷயம் தெரியவில்லை என்றாலும் முதலில் நினைவுக்கு வருவது கூகுள்தான். இத்தகைய கூகுள் இருக்கும் போது வேறென்ன கவலை என்ற அளவுக்கு ஆகிவிட்டது நவீன உலகம். அப்படிப்பட்ட கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார் தெரியுமா?

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் இயர்பெயர் பிச்சை சுந்தரராஜன். 1972ல் ஜூன் 10ம் தேதி மதுரையில் பிறந்தார். சுந்தர் பிச்சையின் தந்தை பெயர்-ரெகுநாதர், தாய் பெயர் லட்சுமி தேவி. சுந்தர் பிச்சையின் தந்தை எலக்ட்ரிகல் இன்ஜினியராகவும், தாயார் ஸ்டெனோ கிராபராகவும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தனர். இதை எல்லாம் பார்த்த சுந்தர் பிச்சைக்கு இளம் வயதில் தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வம் இருந்தது.


காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உலோகவியல் பொறியியல் படிப்பை முடித்தார். 2002ல் அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது எம்.பி.ஏ. படிப்பை முடித்தார். 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியைத் தொடங்கினார். பின்னர் குரோம் போன்ற ஆன்டிராய்டு செயலிகளை அறிமுகம் செய்தார்.

2015ம் ஆண்டு கூகுள் சி.இ.ஓ. என்ற பதவிக்கு அவர் வந்தார். தற்போது கூகுள் மற்றும் ஆல்பாபெட் ஆகிய இரண்டிலும் அதிக வல்லமை பெற்று உயர்ந்த பதவியில் இருக்கின்றார். கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் ஓரு நாள் சம்பளம் ரூ.50,000 என தோராயமாக குறிப்பிடப்படுகின்றது.

சுந்தர் பிச்சையின் மாத வருமானம் இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் எனவும் அமெரிக்க டாலர் மதிப்பில் 2 மில்லியன் டாலர் எனவும் கூறப்படுகின்றது. சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் மட்டுமே ரூ.2,40,00,000. அமெரிக்காவில் 24 மில்லியன் டாலர்கள் எனவும் தோராயமாக கூறப்படுகின்றது.

Next Post

கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்கள், பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு..!!

Thu Nov 17 , 2022
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் வரும் 27ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், புதிய வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 27.11.2022 (ஞாயிற்றுக் கிழமை ) இடம்: மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பொள்ளாச்சி பங்குபெறும் நிறுவனங்கள்: உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி […]
Job

You May Like