தமிழகத்தில் இந்துக்கள் 3வது குழந்தை பெற்றால் ரூ.1 லட்சமும், 4வது குழந்தை பெற்றால் ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருவதாக இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. மேலும் இந்துக்கள் அதிகளவில் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ராம் சேனா அமைப்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது..
கிருஷ்ணகிரி மாவ்ட்டம் ஓசூரில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “ ஸ்ரீராம் சேனா அரசியல் செய்யாது.. ஆனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும்.. தமிழகத்தில் ஜிகாதி மற்றும் மதமாற்றம் அதிகளவில் நடக்கிறது.. அதற்கு திமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது..” என்று கூறினார்..
எனினும் இந்த நிதியுதவி எதன் அடிப்படையில் வழங்கப்படும், எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் அல்லது நடைமுறைகள் குறித்து பிரமோத் முத்தாலிக் விரிவாக விளக்கம் அளிக்கவில்லை.. இது தனிப்பட்ட ஒரு அமைப்பின் அறிவிப்பு மட்டுமே.. இது அரசு சார்ந்த திட்டம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்..



