தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், முந்தைய அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொருட்கள் தரமற்றதாக இருந்ததால் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தியை சரி செய்ய வேண்டிய கட்டாயம் திமுக அரசுக்கு உள்ளது. இதன் காரணமாக, வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.3000 வழங்கலாம் என்று மூத்த அமைச்சர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முதல்வர் தரப்பில் விசாரிக்கப்பட்டது.. அப்போது, நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டி அதிகபட்சமாக ரூ.1000 மட்டுமே சாத்தியம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட முதல்வர், நிதி ஏற்பாடுகளை சமன் செய்து, பொங்கல் பரிசுத் தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி கொடுக்கலாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கூடிய விரைவில் பொங்கல் பரிசு ரூ.2000 பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. டோக்கன் விநியோகம் செய்து அதனடிப்படையில் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் ரூ.2000 பரிசுத்தொகை குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது..
Read More : பாமக தலைவர் யார்? அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு.. எப்போது விசாரணைக்கு வருகிறது?



