தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தின்படி, டெலிவரி வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. உணவு, பார்சல் போன்ற பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள், இந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்தைப் பெற, விண்ணப்பதாரர்கள் முதலில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஸ்விக்கி, சொமாட்டோ, அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நல வாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மின்சார ஸ்கூட்டர் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை பதிவு செய்யாதவர்கள், மேற்கண்ட இணையதளம் மூலம் முதலில் பதிவு செய்த பிறகு, மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இத்திட்டம் தொடர்பாக மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை அணுகலாம்.
மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்களைத் தொடர்புகொண்டு இந்தத் திட்டத்திற்கான கூடுதல் தகவல்களை பெற்று, உடனடியாக விண்ணப்பித்து மானியத்தைப் பெறலாம்.
Read More : வாகனங்கள் வாங்கப் போறீங்களா..? தடாலடியாக குறையப்போகும் விலைகள்..!! முழு லிஸ்ட் இதோ..!!