மகளிருக்கு ரூ.2,500, திருமணத்திற்கு 1 சவரன் தங்கம்.. குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!

tvk vijay speech

தவெக சார்பில் இன்று மகளிர் தின விழா நடைபெற்றது.. இதில் தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.. அப்போது பெண்கள், குழந்தைகள், முதியோர் நலன் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதே தவெகவின் அடிப்படை நிலைப்பாடுகளில் ஒன்று.. அதற்கென தனி இலாகா உருவாக்கப்படும். அந்த இலாகா எனது நேரடி கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்கும்.. இதுவே நமது தேர்தல் வாக்குறுதி.


60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் இனி ரூ.2500 வழங்கப்படும்.. இதில் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு விதிவிலக்கு.

அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

தவெக ஆட்சி அமைந்த உடன் ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் திருமணத்திற்கும் ஒரு சவரன் தங்கம், பட்டுப்புடவை அண்ணன் வீட்டு சீராக அளிக்கப்படும்.

இடைநிற்றலே இல்லாமல் செய்வதற்காக ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.15,000 பொருளாதார உதவித் தொகையாக வழங்கப்படும்.

வெற்றிப் பயணம் திட்டம். பிங்க் பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.. அரசுப் போக்குவரத்தின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும்.. 500 குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து நீதி வழங்க அஞ்சலை அம்மாள் ஃபாஸ்ட் ட்ராக் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

பெண்கள் பாதுகாப்புக்காக ஸ்மார்ட் பேனிக் பட்டன்கள் அறிமுகம் செய்யப்படும்.. அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் இந்த பட்டன்கள் பொருத்தப்படும்.

ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ் உருவாக்கப்படும்.. இதற்காக அதி நவீன கட்டளை மையங்கள் அமைத்து பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

அனைத்து பெண்களுக்கும் விலையில்லா சானிடரி பேட்கள் வழங்குவது உறுதி செய்யப்படும்.

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா நிதி வழங்கப்படும்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். மேலும் ஒரு பேபி வெல்கம் கிட் வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்..

Read More : யானை.. ஜெகஜால கில்லாடி.. கடைசியில் ட்விஸ்ட்.. மகளிர் தின விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை..!

RUPA

Next Post

" எனக்கு Hurt ஆகுது..” சங்கீதா விவாகரத்து விவகாரம்.. முதன்முறையாக மனம் திறந்த விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?

Sat Mar 7 , 2026
தவெக சார்பில் இன்று மாமல்லபுரத்தில் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மகளிர் தின விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் யானை தொடர்பான குட்டிக்கதை உடன் தனது உரையை தொடங்கினார்.. பெண்களுக்கான வாக்குறுதிகளை விஜய் அளித்தார்.. மகளிருக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், திருமணத்திற்கு 1 சவரவன் தங்கம், அனைத்து […]
vijay sangeetha n 2

You May Like