ரூ.3,000க்கு FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுங்கக் கட்டணங்களை எளிதாக்குவதையும் சாலைப் பயணத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்ட ஒரு முக்கிய நடவடிக்கையை இந்திய அரசு எடுத்துள்ளது. ஆம். ரூ.3,000க்கு FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஆகஸ்ட் 15, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது. கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கா அல்லது 200 பயணங்களுக்கு செல்லுபடியாகுமா?
இந்த பாஸ் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தொடர்ச்சியான சுங்கக் கட்டணங்களைக் குறைப்பதன் மூலம் வழக்கமான நெடுஞ்சாலை பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (ஜூன் 18, 2025) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அவரின் பதிவில் “தொந்தரவு இல்லாத நெடுஞ்சாலைப் பயணத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 15, 2025 முதல் ரூ.3,000 விலையில் FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை அறிமுகப்படுத்துகிறோம். செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் வரை செல்லுபடியாகும். எது முதலில் வருகிறதோ அதுவரை.. இந்தப் பாஸ் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டு பாஸ் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை செயல்படுத்தும். செயல்படுத்துதல் மற்றும் புதுப்பித்தலுக்கான பிரத்யேக இணைப்பு விரைவில் ராஜ்மார்க் யாத்ரா செயலியிலும், NHAI மற்றும் MoRTH இன் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் கிடைக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகள் சர்ச்சை
இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் தான். இது பெரும்பாலும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது. ஒற்றை முன்பணக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், அரசாங்கம் சுங்கச்சாவடிகளில் நிலவும் குழப்பத்தை நீக்கவும், மோதலை குறைக்கவும், தொந்தரவு இல்லாத பயணத்தை உறுதி செய்யவும் இந்த திட்டத்தை கொண்டுள்ளது.
ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸின் முக்கிய அம்சங்கள்
200 பயணங்கள் அல்லது ஒரு காலண்டர் ஆண்டு வரை உள்ளடக்கிய ரூ.3,000 நிலையான கட்டணம்
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பொருந்தும்
தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு (கார்கள், ஜீப்புகள், வேன்கள்) பொருந்தும்
பயன்பாட்டு வரம்பு அல்லது செல்லுபடியாகும் காலம் அடையும் வரை சுங்கக் கட்டணம் இல்லை
சரிபார்க்கப்பட்ட அரசு தளங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படலாம்
எப்படி வாங்குவது?
திட்டம் அமலுக்கு வந்தவுடன், பயனர்கள் பாஸை வாங்கலாம்:
ராஜ்மார்க் யாத்ரா செயலி NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) மற்றும் MoRTH (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் இந்த பாஸை வாங்கலாம்…
செல்லுபடியாகும் ஃபாஸ்டேக் சான்றுகள், வாகன பதிவு எண் மற்றும் அடிப்படை சரிபார்ப்பு தேவைப்படும்.
டிஜிட்டல் டோலிங் அமைப்பு
இந்த முயற்சி டிஜிட்டல் இயக்கம், சுங்கச்சாவடிகளில் மேம்பட்ட செயல்திறன் மற்றும் நெரிசல் இல்லாத நெடுஞ்சாலைகளுகளை பயணிகள் அடைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் FASTag ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், வருடாந்திர பாஸ் என்பது ஓட்டுநர்களுக்கு மிகவும் மலிவான வசதியான பயண விருப்பங்களை வழங்குவதற்கான ஒரு தர்க்கரீதியான பரிணாம வளர்ச்சியாகும்.
Read More : கறுப்புப் பணத்தை பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள்..? பின்னணி காரணம் இதோ..