2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், தயவு செய்து கீழே உள்ள பொத்தானை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள்.. இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், PIB Fact Check பொதுவாக இதுபோன்ற நிதி உதவி குறித்த போலியான செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு மறுப்புத் தெரிவித்து வருகிறது.
முக்கிய எச்சரிக்கை :
மத்திய அரசு சார்பில் “ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும்” என்ற பெயரில் எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இதுபோன்ற (https://xcyrx.xyz/…) சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் பெரும்பாலும், மக்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கித் தகவல்களைத் திருடுவதற்காக மோசடியாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அந்த இணைப்பைக் கிளிக் செய்யவோ அல்லது உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிரவோ கூடாது என்றும் அரசு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். அரசுத் திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை எப்போதும் PIB-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது சம்பந்தப்பட்ட அரசு அமைச்சகங்களின் வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இன்னும் இந்த வேலையை முடிக்கலையா..? உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!



