இளைஞர்களை வேளான் தொழில் முனைவோராக்க ரூ.4.56 கோடி மானியம்.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..!

mrk panneerselvam

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ 58,000 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. உழவர்களின் வாழ்வாதாரம், வருமானத்தை அதிகரிப்பதே அரசின் நோக்கம். உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுங்கள் வழங்கப்பட்டுள்ளன.


10,558 சிறு பாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யபப்ட்டுள்ளது. கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

நெல் ஜெயராமன் திட்டத்தில் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மண்ணுயிர் காப்போ திட்டத்தில் இதுவரை 21.35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு, 19.51 லட்சம் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்..

2025-26-ம் ஆண்டில் 12.48 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 3 லட்சம் ஏக்கர் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களை வேளான் துறையில் தொழில் முனைவோராக்க ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன. உரம் விதைகளை வழங்க 1000 உழவர் நல சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரிய உணவுகளை காக்க 20.80 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.178 கோடி நிதி பெற்றுள்ளனர்.

10 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More : தமிழக அரசுக்கு ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு.. செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி.. நிதியமைச்சர் குற்றச்சாட்டு..!

RUPA

Next Post

புதிதாக 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு.. 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு.. வேளாண் பட்ஜெட்டில் தகவல்..!

Tue Feb 17 , 2026
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் ” ஐந்தாண்டுகளில் குறுவை பருவத்தில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.2,118 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 5 ஆண்டுகாலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 1600 கோடி மதிப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 2 லட்சம் […]
mrk panneer selvam

You May Like