திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான கல்யாண் முகர்ஜி (Kalyan Banerjee) அவர்களின் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கிக் கணக்கிலிருந்து ரூ.57 லட்சம் மோசடியாக திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மோசடி எப்படி நடந்தது?
அசன்சோல் தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது (2001–2006) கல்யாண் முகர்ஜி திறந்த கணக்கு இதுதான். அதில் அவரது எம்எல்ஏ சம்பளம் வரவாகி வந்தது. பல ஆண்டுகளாக அது செயல்படாத நிலையில் இருந்தது. ஆனால் சைபர் குற்றவாளிகள் போலியான ஆவணங்களைக் கொண்டு கணக்கை மீண்டும் செயல்படுத்தினர்.
கல்யாண் முகர்ஜியின் புகைப்படத்தை சூப்பர் இம்போஸ் செய்து, போலியான ஆதார் மற்றும் பான் கார்டுகளைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ஒரு போலியான மொபைல் எண்ணை கணக்குடன் இணைத்து, OTPகள் மற்றும் பரிவர்த்தனை தகவல்களைப் பெற்றனர்.
கல்யாண் முகர்ஜி இதுகுறித்து பேசிய போது “இது அதிர்ச்சி அளிக்கும் சம்பவம். நான் அசன்சோல் தெற்கு எம்எல்ஏயாக இருந்தபோது இந்தக் கணக்கு திறக்கப்பட்டது. நான் செராம்பூர் எம்.பி. ஆன பிறகு இது பல ஆண்டுகள் செயலற்ற நிலையில் இருந்தது. அந்தக் கணக்கிலிருந்து ரூ.57 லட்சம் திருடப்பட்டுள்ளது. இது எம்.பி. ஒருவருக்கே இப்படியாக நடந்தால், சாதாரண மக்களின் நிலை என்ன ஆகும்?”
விசாரணை நிலை:
வங்கியின் புகாரின் பேரில் கொல்கத்தா காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
மோசடிக் காசோலைகள் எப்படி பயன்படுத்தப்பட்டன?
பணம் பலரது கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, நகை வாங்குதலுக்கும் ATM வழியாக பணம் எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.
கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஒருவர் பேசிய போது “விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து பரிவர்த்தனைகளும் மற்றும் தகவல்களும் ஆராயப்படுகின்றன.” என்று கூறினார்..
Read More : ஆதார்-பான் இணைக்க கடைசி வாய்ப்பு.. இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க.. அவ்வளவு தான்..!



