ஒருவருக்கு தலா ரூ.6 கோடி போனஸ்..!! மொத்தம் எவ்வளவு தெரியுமா..? கோடிகளை கொட்டி கொடுத்த நிறுவனம்..!!

டெக் உலகின் ஜாம்பவன்களாக இருக்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ட்விட்டர் மற்றும் அமேசான், ஐபிஎம் போன்ற நிறுவனங்களே தங்களது ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்து, சம்பளத்தையும் குறைத்து வரும் இதே வேளையில் சீனாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கிறது.


சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் ஹெனன் மைன் என்ற நிறுவனம்தான் ஊழியர்களை சிறப்பாக கவனித்திருக்கிறது. கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, வியட்னாம், தாய்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், மலேசியா, மால்டா, சவுதி அரேபியா, பெரு, சிங்கப்பூர், எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு தனது உற்பத்திகளை விற்பனை செய்து வருகிறது. சீனாவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் வேளையில், ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23% அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் அதாவது 1.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்துள்ளது.

ஒருவருக்கு தலா ரூ.6 கோடி போனஸ்..!! மொத்தம் எவ்வளவு தெரியுமா..? கோடிகளை கொட்டி கொடுத்த நிறுவனம்..!!

இதனால், மகிழ்ச்சியில் திளைத்துப் போன இந்நிறுவனம் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க அதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் 60 மில்லியன் யுவான் (72.48 கோடி ரூபாய்) பணத்தை மலை போல குவித்து வைத்து ஊழியர்களின் புருவத்தை உயரச் செய்திருக்கிறது. அதில் நிறுவனத்தின் உயர்வுக்கு சீரிய பணியை ஆற்றிய முக்கிய 3 சேல்ஸ் மேலாளர்களுக்கு தலா ரூ.6 கோடியும், மீதமுள்ளோருக்கு ஒரு மில்லியன் யுவானும் கொடுத்து மகிழ்வித்திருக்கிறது அந்நிறுவனம். இதுபோக, நிகழ்ச்சியில் குவித்திருந்த பணத்தை எண்ணுவோருக்கும் சிறப்பு வழங்கிய அந்நிறுவனம், போனஸோடு நிறுத்தாமல் அனைத்து ஊழியர்களுக்கும் 30% சம்பள உயர்வும் வழங்கியுள்ளது.

CHELLA

Next Post

#Breaking..!! மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம்..!! இறுதி தேதி எப்போது தெரியுமா..? அமைச்சர் அறிவிப்பு..!!

Tue Jan 31 , 2023
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில், வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் […]
tnebaadhar 1665682258566 tile 1668856807

You May Like