ஒரே நாளில் ஏழைகளின் கரங்களுக்கு ரூ.6500 கோடி.. நிதியமைச்சர் பெருமிதம்..

thangam thennarasu

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் ” இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. நாடு போற்றும் நல்ல திட்டங்களை தந்தவர் முதல்வர் ஸ்டாலின்.. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் வகையில் 5 ஆண்டுகளில் சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கி உள்ளோம்..


மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்தித்தாலும் நாம் சாதித்துள்ளோம்.. நமது திட்டங்களால் பிற மாநிலங்களும் நம்மை பின்பற்றும் நிலை உண்டாகி உள்ளது.. இதனால் நாட்டிற்கே முன்னோடியாக மாறி உள்ளோம்..

தமிழக அரசின் முத்திரை திட்டங்களில் முதன்மையானது மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 3 மாத மகளிர் உரிமை தொகை ரூ.3,000. கோடைகால சிறப்பு தொகை ரூ.2000 என சேர்த்து வழங்கப்பட்டது.. ஒரே நாளில் ரூ.6500 கோடி நிதியை ஏழை எளியவரின் கரங்களுக்கு சென்று சேர்த்தவர் முதலமைச்சர்.. விடியல் பயணம் திட்டம் மூலம் 881 கோடி முறை மகளிர் பாதுகாப்பாக பயணம் செய்துள்ளனர்.. கைம் பெண்களின் கண்ணிய வாழ்வை உறுதி செய்திட நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.. மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 35 என்ற அளவில் உள்ளது..” என்று தெரிவித்தார்..

Read More : பட்ஜெட் என்ற பெயரில் மாபெரும் காது குத்தும் விழா.. பத்திரிகை அடித்து நூதன முறையில் அதிமுக விமர்சனம்..!

RUPA

Next Post

Flash : கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 9 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்.. இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு..!

Tue Feb 17 , 2026
தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் ” இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. நாடு போற்றும் நல்ல திட்டங்களை தந்தவர் முதல்வர் ஸ்டாலின்.. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் வகையில் 5 ஆண்டுகளில் சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கி உள்ளோம்..” […]
Kalaignar Kavavu illam 2025

You May Like