இந்திய தபால் துறை, நாட்டின் பொருளாதார அடித்தளத்தை மட்டும் அல்ல; மக்களின் நம்பிக்கையையும் தாங்கி நிற்கும் ஒரு நிறுவனமாக பல தசாப்தங்களாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சேமிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் தபால் துறை வகிக்கும் பங்கு அளப்பரியது. குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஏற்ற சேமிப்பு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், சமூக நலன் என்ற நோக்கத்தை அது தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது.
அந்த வகையில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் வழங்கும் திறமையான திட்டம்’கிராம் சுரக்ஷா யோஜனா’. இந்தத் திட்டத்தில் ஒரு நாளுக்கு வெறும் ரூ. 50 (அதாவது மாதம் ரூ. 1500) முதலீடு செய்தாலே, நீண்ட காலத்தில் ₹35 லட்சம் வரை நிதி உருவாக்க முடியும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது. மேலும், திட்டம் முடியும் போது முதலீட்டாளர்கள் போனஸுடன் கூடிய முழுத் தொகையையும் பெறுவர்.
உதாரணமாக 19 வயதுடைய ஒருவர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் அவர் 55 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1,515 பிரீமியம் செலுத்த வேண்டும். தினமும் ரூ.50 மட்டும் சேமித்தால் அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1,500 டெபாசிட் செய்தால் திட்டம் முதிர்ச்சியடையும் போது ரூ. 35 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். 58 வயதில் முதிர்ச்சியடையும் போது உங்களுக்கு சுமார் ரூ.33.40 லட்சம் வருமானம் கிடைக்கும். 60 வயதில் முதிர்ச்சியடையும் போது உங்களுக்கு சுமார் ரூ.34.60 லட்சம் வருமானம் கிடைக்கும்.
திட்டத்தின் முக்கிய நன்மைகள்:
* முதலீட்டாளர் 80 வயதில் வாழ்ந்திருந்தால், திட்டத்தின் பரிமாணத்தின்படி முழுத் தொகையும், போனஸும் வழங்கப்படும்.
* முதலீட்டாளர் 80 வயதிற்கு முன் இறந்துவிட்டால், அவரால் முன்னரே பரிந்துரைக்கப்பட்ட நாமினி (Nominee) அந்த முழுத் தொகையையும் பெறுவார்.
* 19 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.
* குறைந்த தொகையில் மிகச்சிறந்த எதிர்கால நிதி பாதுகாப்பை அளிப்பதால், கிராம் சுரக்ஷா யோஜனா தற்போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.



