இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது..
ரஷ்யாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திய்வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டது.. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் வெளியேறினர்.
ரஷ்யாவின் வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளில் பதிவான மோசமான நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது.. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ரஷ்யாவின் சில பகுதிகளை சுனாமி தாக்கியது.. ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் ஹெக்கைடோ உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கின..
மேலும் அமெரிக்காவின் கடலோர பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு.. மேலு, பல நாடுகள் சுனாமி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பின்படி, ஈக்வடார், ரஷ்யா, வடமேற்கு ஹவாய் தீவுகள், சிலி, கோஸ்டாரிகா, ஹவாய், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் இந்தியாவிலும் சுனாமி ஏற்படுமா என்ற பீதி எழுந்தது.. ஆனால் இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அந்த மையம் விளக்கம் அளித்துள்ளது.. “ இந்த நிலநடுக்கம் தொடர்பாக இந்தியாவிற்கும் இந்திய பெருங்கடலுக்கும் எந்த சுனாமி அச்சுறுத்தலும் இல்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : ரஷ்யா நிலநடுக்கம் எதிரொலி.. சுனாமி ஆபத்தில் உள்ள நாடுகள், தீவுகள்.. முழு லிஸ்ட் இதோ..