50 பயணிகளுடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம் சீன எல்லைக்கு அருகில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் தூர கிழக்கில் சுமார் 50 பேருடன் ஒரு பயணிகள் விமானம் காணாமல் போனது. காணாமல் போன விமானம் An-24 பயணிகள் விமானம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.. அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், சீனாவின் எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
எனினும் அப்போது இந்த விமானம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புடான தொடர்பை இழந்தது.. அப்போது இந்த விமானம், அதன் இலக்கிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக கூறப்படுகிறது.. AN-24 விமானத்துடனான தொடர்பை மீட்டு கொண்டு வர கட்டுப்பாட்டு அறை முயற்சி மேற்கொண்டுள்ளது.. விமான விபத்துக்குள்ளானதா என்ற சந்தேகத்தின் பேரில் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்..
5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் தெரிவித்தார். இது குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
முன்னதாக கடந்த திங்கள் கிழமி மெக்சிகோ நகரில் ஓடுபாதையில் இருந்த ஏரோமெக்ஸிகோ பிராந்திய ஜெட் விமானம் டெல்டா ஏர் லைன்ஸ் போயிங் 737 ஜெட் விமானத்துடன் கிட்டத்தட்ட மோதியது. ஏரோமெக்ஸிகோ விமானம் தரையிறங்க வந்து கொண்டிருந்தபோது, அது ஏற்கனவே புறப்படத் தொடங்கியிருந்த டெல்டா ஏர் லைன்ஸ் போயிங் 737 ஜெட் விமானத்தின் முன் தரையிறங்கியபோது இந்த சம்பவம் நடந்தது..