ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வருகை தந்துள்ளார்.. தனி விமானம் மூலம் இன்று மாலை புது தில்லியின் பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.. 4 ஆண்டுகளுக்குப் பிறகு புடின் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த புடின் தற்போது இந்தியா வந்துள்ளார்..
23வது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டிற்காக வருகை தந்துள்ள புடினை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார். டெல்லி விமான நிலையத்தில் பாரம்பரிய நடனமான பரத நாட்டியம் ஆடி புடினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
புடினின் வருகை இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஏனெனில் இரு தரப்பினரும் பல வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் தரப்பில் Su-57 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் மற்றும் S-500 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் குறித்தும் விவாதம் நடைபெறலாம். இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அதிகரித்துள்ளது, இது உக்ரைனில் போரை தூண்டுவதாக அமெரிக்கா கூறியது.
புடின், பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு இரவு உணவிற்குச் செல்ல உள்ளார்.. இதற்காக மோடியும் புடினும் ஒரே காரில் பயணம் செய்தனர்… வெள்ளிக்கிழமை, அவர் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். மேலும் ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்..



