மதுரைபுறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் கள்ளிக்குடி பகுதியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்காக நடைபெற்றது.. இந்தஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.. தேர்தல் பணிகள், கட்சி அமைப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது போன்ற விஷயங்கள் குறித்து அவர் ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் பேசிய அவர் “ எத்தனை பேர் போனாலும் அதிமுக மீண்டும் வலிமையோடு எழுந்து நிற்கும்.. பதவி அல்லது தனிப்பட்ட லாபம் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைக்கும் கிளைச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களே கட்சியின் உண்மையான வலிமை எனவும் கூறினார்.
மேலும் “ அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கடி அதிகமாக உள்ளது.. பணி நியமனம், பணி மற்றும் அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
முதலமைச்சர் இதுபற்றி வாய் திறக்கவே இல்லை. அமைச்சரவையில் நம்பிக்கை பெற்ற நேரு திருச்சியில் மாநாடு நடத்தினார்.. அவருக்கு எப்படி அமலாக்கத்துறை கடிதம் எழுதியது என்று கேட்கவில்லை.. இதுபற்றி வாய் திறக்கவில்லை.. இதனால் நேரு ஏமாற்றத்தோடு சென்றார்..
நீங்கள் தான் வலிமையாக இருக்கிறீர்களே, மகளிர் மாநாடு, இளைஞர் அணி மாநாடு என எதற்கு மாநாடுகளை நடத்துகிறீர்கள்.. வலிமையாக இருந்தால் மக்களே ஓட்டு போடுவார்கள். ஏன் நடுக்கம்..? அதிமுகவை அழிக்க வேண்டும் என்று தான் இத்தனை பேரை அதிமுகவில் இருந்து அழைத்து சென்று அமைச்சர் பதவி கொடுக்கிறார்.. அமைச்சர் பதவி அல்ல, முதலமைச்சர் பதவி கொடுத்தாலும் அதிமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை அதிமுகவை கட்டி காப்பாற்றுவார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கும்.. தோற்கும் போது ஸ்டாலினை வீட்டில் உட்கார வைத்து மருகமன், சபரீசன் திமுக தலைமையை கைப்பற்றுவார் என்று தகவல் வருகிறது.. இது போல் ஆந்திராவில் நடந்துள்ளது.. மாமனாரை உட்கார வைத்துவிட்டு மருமகன் கட்சியை கைப்பற்றி உள்ளார்.. அந்த வரலாறு தமிழ்நாடு தொடர்வதற்கு ரொம்ப நாள் ஆகாது..
நீங்கள் அதிமுகவை பற்றி கவலைப்பட்டு திமுகவை பறிகொடுத்து விடாதீர்கள்.. அதிமுகவிற்கு புரட்சி தமிழர் எடப்பாடியார் இரும்பு மனிதர் இருக்கிறார்.. அவர் பாதுகாத்துக் கொள்வார்..” என்று தெரிவித்தார்..
அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.பி உதயகுமார் விமர்சித்தார். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டிருப்பது திமுகவின் அரசியல் பலவீனத்தை காட்டுகிறது எனவும் கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக அமர்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Read More : விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானாம்..! திமுக கோட்டையில் களமிறங்குகிறாரா..? பரபரப்பு தகவல்..!



