ரூ.1.5 கோடி சம்பளம்.. வாரத்தில் 42 மணி நேரம் மட்டும் தான் வேலை..!! சலுகைகளை வாரி வழங்கும் நாடு எது தெரியுமா..?

iland 1 1 1 1

ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரண்டு தீவுகள் உலகிலேயே தனித்துவமான இடங்களில் ஒன்று. இங்கு வெறும் 40 பேர் மட்டுமே வசிக்கின்றனர். பொதுவாக அழகான தீவுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லும் போது, உணவு, தங்குமிடம், கடல் அனுபவம் போன்ற அனைத்துக்கும் லட்சக்கணக்கான செலவுகள் தேவைப்படும்.


ஆனால் இத்தீவுகளில் தற்போது ஒரு வித்தியாசமான வாய்ப்பு உள்ளது. இங்கு பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுவதோடு, ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி ஊதியம் கூட கிடைக்கும். இதற்கான சில நிபந்தனைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் கிராமப்புற மருத்துவத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் பணிபுரிந்த அனுபவம் இருப்பதும் அவசியம். மேலும், வேலைக்கு வாரத்திற்கு 40 மணி நேரம் பணிபுரிய வேண்டும்.

இதற்காக வெஸ்டர்ன் ஐல்ஸ் அரசு ஆண்டுக்கு ரூ.1 கோடி மூல ஊதியம், இடமாற்ற உதவித் தொகை ரூ.8 லட்சம்,பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் வழங்குகிறது. இதனால், மொத்த ஊதியம் ₹1.5 கோடி ஆகிறது. இந்த வாய்ப்பு பிரிட்டன் மருத்துவர்கள் பெறும் ஊதியத்தைவிட சுமார் 40% அதிகம்.

இதோடு, தீவில் பள்ளி ஒன்றும் செயல்படுகிறது. அந்த பாடசாலையில் மொத்தம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இதில் 2 பேர் நர்சரி வகுப்பு (வயது 4) உடையவர்கள். ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.62 லட்சம் ஊதியம் வழங்கப்படுவதோடு, ரூ.6 லட்சம் உதவித் தொகையும் வழங்கப்படும்.

Read more: Flash : ஷாக்..! இன்று மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

English Summary

Salary of Rs. 1.5 crore.. Working only 42 hours a week..!! Do you know which country offers benefits?

Next Post

மாரடைப்பு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்த அறிகுறிகள் தெரியும்.. யார் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

Fri Oct 24 , 2025
சோர்வு, மார்பில் லேசான எரியும் உணர்வு அல்லது கனமான உணர்வு பொதுவான விஷயம் என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் இந்த சிறிய அறிகுறிகள் ஒரு பெரிய எச்சரிக்கை மணியாக இருந்தால் என்ன செய்வது? மாரடைப்பு திடீரென்று வருவதில்லை என்பதால், அது வருவதற்கு முன்பே உடல் நிச்சயமாக சில எச்சரிக்கை சமிக்ஞைகளை அளிக்கிறது. ஆனால் நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம் அல்லது அவை சோர்வு என்று நினைத்து புறக்கணிக்கிறோம். நீங்கள் அல்லது […]
Heart attack Chest Pain Symptoms

You May Like