தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியின் கால்நடை மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கால்நடை அரசு மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிக அடிப்படையில், 12 மாதங்களுக்கு மட்டுமே நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.V.Sc (கால்நடை அறிவியல்) பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ கவுன்சிலில் (Tamil Nadu Veterinary Council) கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.60,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள கால்நடை மருத்துவர்கள், chennaicorporation.gov.in என்ற சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து, அதனுடன் கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: டிசம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணி.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Chief Veterinary Officer, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 600003.
இந்தப் பணி குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள, சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 044 – 2561 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read More : முருகப்பெருமானுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்..!! நெய் விளக்கு ஏற்றி இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!



